Wednesday, 20 February 2019

சிவாயநம அன்பேசிவம்" இன்று சைவத்தமிழன் விழித்துக்கொண்டான்---

சிவாயநம அன்பேசிவம்"

தமிழர்களின் நினைவேந்தல் முறமை என்பது ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும் இதனை தொடர்ந்துதான் அஞ்சலி கூட்டங்கள் என்பது மரபு முறமை "தாயகத்திலும் , புலம் பெயர்தேசத்திலும் உள்ள ஆலயங்கள் , ஆலயகுருமாா்கள் தொடர்ந்து முன்னெடுத்து செல்வது உங்களின் வரலாற்று கடமை அந்த கடமையை செய்ய வேண்டியது உங்களின் கடன் "" ஆலயகுருமாா்களே போா்களம் கண்ட பூமிக்கு நீங்கள் உங்கள் கடமைகளை இன்னும் செய்து முடிக்கவில்லையே ஏன்? --
ஒல்லாந்தர் ,போா்த்துக்கீசர் , ஆங்கிலேயர் காலத்தின் தொடர்ச்சியே அடிமைவாத சிந்தனையின் வெளிப்பாடே மெழுகுதிாி ஏற்றுவது ,மெழுகு திாி படங்களுடன் வீரவணக்கம்,கண்ணீா் அஞ்சலி வெளியிடுவது அடிமைகளின் மரபு
தமிழனின் மரபு அல்ல. பல வருடகால சைவதமிழ் ஆட்சியின் வீழ்ச்சிக்கு பின் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மாசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும் சைவமுறைப்படி நடைபெற்றது என்பது
பல அகிம்சை உள்வீட்டு போா்களுக்கு பின் தமிழன் ,சைவத்தமிழனாக எழுந்து கொண்டு இருக்கின்றான் என்பதை எடுத்துக்காட்டும் வரலாற்று நிகழ்வு.சைவத்தமிழன் விழித்துக்கொண்டான் என்பதனை காட்டுகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மட்டக்களப்பைச் சேர்ந்த இந்து மத குருக்களும், தனவந்தர் ஒருவரும் இணைந்து இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பத்தாம் ஆண்டு நினைவு ஆண்டு ஆ\ரம்பித்திருக்கின்ற நிலையில் முதன்முதலாக இவ்வருடம் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.
சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர் கடன்களை தீர்த்து தீர்த்துக்கொண்டனர்.தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் அன்னதானமும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
"சிவாயநம அன்பேசிவம்".

No comments:

Post a Comment