Tuesday, 5 February 2019

சைவம்

நிலத்தின் கடினத் தன்மையை இளக்கி நெகிழச் செய்து பயன்படு பொருள்களின் விளைவுக்குத் தகுதியாக்குவதூழவு. சுவையுடனவாகஆனால் சுவைக்க முடியாதனவாக ஒன்றோடொன்று மாறுபட்டசு வையுடையனவாக ஆக்குவது சமைத்தல். மனித உள்ளங்களை இன்ப அன்பின் விளைநிலமாகத் தகுதிப்படுத்திப் பக்குவப் படுத்தும் தத்துவத்திற்கு வாழ்க்கை முறைக்குச் சமயம் என்பதுபெயா். மனித வாழ்க்கையைச் சமைத்துப் பக்குவப்  படுத்துவதே சைவ சமயத்தின் நோக்கம்
துன்பத்தையும் கூட மேலெழுந்த வாாியாக நீக்குவது நிறைவானபயனைத் தராது. துன்பத்திற்குக் காரணமான அறியாமையை உயிா்ப் பகையை அடியோடுஅகற்றவேண்டும்.கிழங்குகள்வெட்டிய இடத்தில் மேலும் தளிா்ப்பதைப் போல அறியாமையும் பகையும் மேலும் மேலும் வாய்ப்புக் கிடைக்குபோதெல்லாம் தழைத்துவளரும். அதனாலன்றோ சேக்கிழாா், “பாசப் பழிமுதல் பறிப்பாா் போல”என்றாா்

No comments:

Post a Comment