1. போருக்கு பின்னர் அதிகளவிலான இயந்திரம் மூலம் நீர் இறைத்தல் பல மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு இறைக்கப்படும் நீரின் பெரும்பாலான பகுதி விரயமாக்கப்படுகின்றது.
2. விவசாயத்துக்கு பயன்படுத்தும் கிருமி நாசினிகள் , உரங்கள் நிலத்தடி நீரை மாசு படுத்துகின்றன. இதனால் குடி நீர் பிரச்னை உருவாகுவதுடன் , நைட்ரஜன் சார்ந்த இரசாயணப் பொருள் உடலுக்கும் பல தீங்கு விளைவிக்கலாம்.
3. சுண்ணாகத்தில் எரிபொருள் கழிவு நிலத்தடி நீரில் கலந்ததால் - அதை அண்டிய பகுதிகளில் குடி நீர் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது .
எரிபொருள் கழிவுடன் ஈயம் க்ரோமியம் போன்ற உலோகங்களும் நீரில் கலந்துள்ளன.
எரிபொருள் கழிவுடன் ஈயம் க்ரோமியம் போன்ற உலோகங்களும் நீரில் கலந்துள்ளன.
4. நிலத்தடி நீரின் அதீத பாவனையால் அதை ஈடு செய்ய கடல் நீர் ஊடுருவி , கரையோர கிணறுகளை உப்பு அல்லது சவர் நீராக மாற்றுகின்றன .
5. கட்டடங்கள் அதிகரித்தமையாலும் , மரங்கள் அழிக்கப்பட்டமையாலும் மழை நீர் நிலத்துக்குள் போகும் அளவு குறைந்து , பெரும்பாலான மழை கடலுடன் கலக்கின்றது . [ கடடடங்கள் நீர் நிலத்துடன் சேர்வதை குறைக்கும் , தாவரங்கள் மழை நீர் நிலத்துடன் சேரும் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் அதிக நீர் நிலத்தை அடைய வழி வகுக்கும்.]
6. விவசாயம் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளது , ஆனால் அவர்கள் பழைய முறையான வாய்க்கால் மூலம் நீர் பாச்சுவதால் பெரும்பாலான நீர் விரயமாக்கப்படுகின்றது . இவர்கள குழாய்களை உபயோகிப்பதன் மூலம் புதிய நீர் விரயம் குறைந்த வழிகளை கையாள்வதில்லை.
7. புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகியதால் , நிலத்தடி நீர் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
8. குளங்கள் குட்டைகள் புனர் நிர்மாணம் செய்யப்படாததால் , மழை நீர் நிலத்துக்கு செல்லும் அளவு குறைவடைந்துள்ளதுடன் , பெரும்பாலான மலை நீர் கடலுடன் கலப்பதுடன் , ஆவியாக போகும் விகிதமும் அதிகம் .
9. கழிவு நீர் சுத்திகரிப்பு முறை இன்மையால் , பெரும்பாலான கழிவு நீர் கடலுக்குள் செல்கின்றது , இதை சுத்திகரித்து மீள் பாவனை செய்யும் முறைகள் எம்மிடம் இல்லை .
10. மக்களிடம் நீர் விரயம் தொடர்பான அறிவு இன்மையால் , நீர் விரயம் மிகவும் அதிகரித்துள்ளது .
இப்பொழுதுள்ள குடி நீர் பிரச்சனைக்கு என்ன தீர்வு ?
உடனடி தீர்வு
1. நீரத்தாங்கி [bousers ] மூலம் நீர் உள்ள இடத்திலிருந்து இல்லாத இடத்துக்கு வழங்குதல்
2. குழாய்கள் மூலம் நீர் உள்ள இடத்தில இருந்து நீர் இல்லாத இடத்துக்கு வழங்குதல்
3. நீர் விரயத்தை குறைதல்
இடைத்தர தீர்வு
1. கடல் நீர் சுத்திகரிப்பு
2. இரணைமடு இல் இருந்து குழாய் மூலம் குடி நீர் தருவித்தல்
நிரந்தர தீர்வு
1. மகாவலி ஆற்றை வடக்குக்கு கொண்டு வருதல்
1. மகாவலி ஆற்றை வடக்குக்கு கொண்டு வருதல்
2. நிலத்தடி நீர் சேகரிப்பை அதிகரித்தல்
3. நீர் மாசடைவதை தடுத்தல்
4. ஏரிகளை உப்பகற்றி , நன்னீர் ஏரியாக்குதல் - யாழ்ப்பாண ஆற்றுத் திட்டம்
உடனடி தீர்வு
1. நீரத்தாங்கி [bousers ] மூலம் நீர் உள்ள இடத்திலிருந்து இல்லாத இடத்துக்கு வழங்குதல்
மாசு அடைந்த நீரை மக்கள் பருகாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் , அவர்களுக்கு தேவையான குடி நீரை நீர் வழங்கல் பிரிவும் மாகாண சபையும் இணைந்து உடனடியாக தீர்வை வழங்க முடியும் .ஆனால் இது ஒரு சிறந்த தீர்வோ நிரந்தர தீர்வோ அல்ல . ஆனால் அவசியமானது .
இதனால் நிலத்தடி நீர் குறைவடையும் , அதற்காக மக்கள் மாசு அடைந்த நீரை குடித்து வாதைக்குள்ளாவதுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர் குறைவடைவது இரண்டாம் தர பிரச்சனை.
மாசு அடைந்த நீரை மக்கள் பருகாமல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் , அவர்களுக்கு தேவையான குடி நீரை நீர் வழங்கல் பிரிவும் மாகாண சபையும் இணைந்து உடனடியாக தீர்வை வழங்க முடியும் .ஆனால் இது ஒரு சிறந்த தீர்வோ நிரந்தர தீர்வோ அல்ல . ஆனால் அவசியமானது .
இதனால் நிலத்தடி நீர் குறைவடையும் , அதற்காக மக்கள் மாசு அடைந்த நீரை குடித்து வாதைக்குள்ளாவதுடன் ஒப்பிடுகையில் நிலத்தடி நீர் குறைவடைவது இரண்டாம் தர பிரச்சனை.
2. குழாய்கள் மூலம் நீர் உள்ள இடத்தில இருந்து நீர் இல்லாத இடத்துக்கு வழங்குதல்
குடி நீர் பிரச்சனையால் அதிகமாக பாதிக்கப்படட இடங்களுக்கு , அருகில் உள்ள கிராமங்களுக்கு குழாய்கள் மூலம் நீர் வழங்குவது . நீர்தாங்கி வாகனம் மூலம் வழங்குவதற்கு மாற்றீடாக அமையும் . இது எவ்வளவு சாத்தியம் என்பது கேள்விக்குரியது
3. நீர் விரயத்தை குறைத்தல்
இது ஒரு சிறப்பான முறை ஆனால் இதை நடைமுறைக்கு கொண்டு வருவது மிக மிக கடுமையான காரியம் .
ஓசியில் வரும் தண்ணிய வேண்டியது போல் விரயம் செய்த மனப்பான்மை உடைய மக்களிடம் நீர் விரயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினம் . ஆனால் இது காலத்தின் கட்டாயம் .
ஓசியில் வரும் தண்ணிய வேண்டியது போல் விரயம் செய்த மனப்பான்மை உடைய மக்களிடம் நீர் விரயம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது கடினம் . ஆனால் இது காலத்தின் கட்டாயம் .
1. வீடுகளில் தண்ணீர் விரயத்தை குறைதல் - பலவழிகளும் இதை முன்னெடுக்க முடியும் . இந்த முறைகளை விரிவாக மக்களுக்கு எடுத்துச் செல்வது மாகாண சபையின் உள்ளூராச்சி சபைகளின் பொறுப்பு .
2. விவசாய முறைகளை தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் வழிக்கு மாற்றுதல் , விவசாய பயிர்களை அதற்கு ஏற்றால் போல் மாற்றுதல் அல்லது தெரிவு செய்தல் .
3. தொழிற் சாலைகளுக்கு கட்டுப்பாடு விதிப்பதன் மூலம் அவர்களின் நீர் விரயத்தை குறைதல்
இடைத்தர தீர்வு
1. கடல் நீர் சுத்திகரிப்பு
நாங்கள் இயற்கைக்கு எதிராக எதைச் செய்தாலும் அதற்கு பக்கவிளைவுகள் சிக்கல்கள் உருவாகும் . மருத்துவர் எந்த மருந்தை கொடுத்தாலும் அதில் பக்க விளைவு உண்டு. ஆனால் நாங்கள் நோயால் வரும் உபாதையயும் மருந்தால் வரும் பக்க விளைவையும் ஒப்பீடு செய்து உகந்ததை தெரிவு செய்ய வேண்டும். இது தான் யதார்த்தம் . அதே போல் கடல் நீர் சுத்திகரிப்பால் பல பிரச்சனைகள் உண்டு. ஆனால் தண்ணீர் பிரச்னையையும் மாசு நீரால் வரும் உபாதைகளை ஒப்பிடும் பொழுதும் இது சில சமயம் ஏற்க்க கூடிய ஒரு திட்டம் . ஆனால் அதனால் பயன் அடைபவர்களும் தீமை அடைபவர்களும் நன்மை தீமைகளை முழுதாக அறிந்து சரியான தீர்வு எடுக்க வேண்டும்.
கடல் நீர் சுத்திகரிப்பால் ஏற்படும் நன்மை
1. இது பல நாடுகளிலும் பயன் பாட்டில் உள்ள ஒரு திட்டம் , இதனால் உருவாகும்
தீமைகள் ஆராயப்படடவை அறியப்படடவை . இது ஒரு ஆராய்ச்சி முறையல்ல.
1. இது பல நாடுகளிலும் பயன் பாட்டில் உள்ள ஒரு திட்டம் , இதனால் உருவாகும்
தீமைகள் ஆராயப்படடவை அறியப்படடவை . இது ஒரு ஆராய்ச்சி முறையல்ல.
2. மழை வெயில் என எந்த காலத்திலும் தொடர்ந்து நீரை பெற முடியும்
3. ஓரளவுக்கு குறுகிய காலத்தில் உருவாக்க முடியும்
4. தேவைக்கேற்ப அதிகளவான நீரை பெற முடியும்
5. வேலைவாய்ப்பு , பதவி உயர்வுகள் ஏற்படும்
6. அரசியல் இலாபங்கள் ஏற்பட வாய்ப்புண்டு - ஆனால் நமக்கு தேவியான தண்ணி வருமென்றால் யார் இலாபம் அடைந்தாலும் எமக்கென்ன.
கடல் நீர் சுத்திகரிப்பால் ஏற்படும் தீமைகள்
1. இது ஒரு விலை உயர்ந்த முறை - இது மக்களால் நேரடியாக விலை கொடுக்காவிடினும் , மறை முகமாக இது மக்களின் பணம். ஆனால் வாழ்வதற்கு நீர் வேண்டும் என்றால் பணம் செலவழிச்சு தான் ஆகவேண்டும் .
2. இது அதிக சக்தி தேவைப்படும் ஒரு முறை - அதாவது கடல் நீரை ஆவியாக்கி வடிகட்டும் முறைக்கு , அந்த நீரை ஆவியாக்க நிறையவே வெப்ப சக்தி தேவை [ இதை மின்சாரம் மூலமோ எரிபொருள் மூலமோ வழங்கினாலும் சக்தி விரயம் அதிகம் ] எரிபொருள் பயன் படுத்தினால் அதிக கார்பன் டை ஆக்சைட் வெளியாகும் இது சூழல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும் . திரும்பவும் , குடிப்பதற்கு நீர் இல்லை என்றால் இதையும் தாங்கி செயற்படுத்த வேண்டும் .
3. அதிகளவு நிலத்தை பயன் படுத்த வேண்டி இருக்கும் . இது ஒரு பெரிய விஷயம் அல்ல மற்ற பிரச்சனைகளுடன் ஒப்பிடுகையில் .
4. அத்துடன் இந்த முறையில் உருவாகும் நீர் பாதுகாப்பானது எனினும் , சில சமயங்களில் சில இரசாயணப் பொருள்கள் கலந்திருக்க வாய்ப்பிருப்பதாக ஆராய்ச்சி சொல்கிறது . இது ஒரு காரணியாக கூறி திடத்தை எதிர்க்க முடியாது ஏனெனில் குவைத் போன்ற நாடுகள் நூறு வீதம் இந்த தண்ணிய நம்பித்தான் வாழ்கிறார்கள் . மாசடைந்த நீர் உருவாக வாய்ப்புகள் அரிது. சாலைகளில் விபத்து ஏற்பட்டு விடும் என்பதற்காக சாலைகளை பயன்படுத்தாமல் ஒருவரும் இல்லை . அதே போல் சில விஷயங்களை ரிஸ்க் எடுத்துதான் செய்ய வேண்டும் .
5. செறிவுஅடைந்த உப்பு நீரை கடலில் திரும்ப அனுப்புவதால் கடல் நீர் வாழும் உயிரினங்களை பாதிக்கும். இது தவிர்க்க முடியாதது . ஆனால் பாதிப்பை குறைக்க வழிகள் உண்டு . அதை இலங்கையில் செயற்படுத்துவார்களா என்பது கேள்விக்குரிய விடயம் . நாங்கள் சுண்ணாகத்தில் பார்த்த இன்னொரு நாடகம் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று இல்லை . இத்துடன் எரிபொருளை பாவித்தால் அதன் கழிவை அகற்றவும் வழிமுறை தேவை . மீன்பிடி இணை வாழ்வாதாரமாக கொண்ட மக்களின் தொழில் எவ்வளவு தூரம் பாதிப்படையும் என்பதை யாராலும் சரியாக கணிப்பிட முடியாது. இது ஒரு இடம் சார்ந்த விளைவு , மற்ற இடங்களை உதாரணம் காட்டி நியாயப் படுத்தவும் முடியாது.
6. அய்டின் குறைபாடு ஏற்படும் என்பது உண்மை ஆனால் அது ஒரு சிறந்த காரணம் அல்ல , கடலுணவு உண்டால் சரியாகிவிடும் .
2. இரணைமடு இல் இருந்து குழாய் மூலம் குடி நீர் தருவித்தல்
2. இரணைமடு இல் இருந்து குழாய் மூலம் குடி நீர் தருவித்தல்
கடல் நீரை சுத்திகரிப்பதை விட , மருதங்கேணி போன்ற இடங்களுக்கு இரணை மடுவில் இருந்து நீரை குழாய் மூலம் தருவிப்பது உகந்தது .
ஆனால் வன்னியிலும் நீர் தட்டுப்பாடு உள்ளதுடன் வன்னி அரசியல் வாதிகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் .
அவர்கள் குடி நீருக்கு மட்டுமாவது குழாய் மூலம் நீர் வழங்க ஆதரவு தர வேண்டும் . இது ஒரு மனிதாபிமான செயற்பாடு . நாம் யாவரும் ஒரே மக்கள் என்பதன் வெளிப்பாடாக இருக்கும் . கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காததை போல் செயற்படுவது நல்லதல்ல .
உள்ளதை இப்போதைக்கு பகிர்ந்திருப்பது மிகச் சிறப்பான செயலாக அமையும் .
ஆனால் வன்னியிலும் நீர் தட்டுப்பாடு உள்ளதுடன் வன்னி அரசியல் வாதிகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர் .
அவர்கள் குடி நீருக்கு மட்டுமாவது குழாய் மூலம் நீர் வழங்க ஆதரவு தர வேண்டும் . இது ஒரு மனிதாபிமான செயற்பாடு . நாம் யாவரும் ஒரே மக்கள் என்பதன் வெளிப்பாடாக இருக்கும் . கர்நாடகம் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்காததை போல் செயற்படுவது நல்லதல்ல .
உள்ளதை இப்போதைக்கு பகிர்ந்திருப்பது மிகச் சிறப்பான செயலாக அமையும் .
நிரந்தர தீர்வு
1. மகாவலி ஆற்றை வடக்குக்கு கொண்டு வருதல்
இது ஆகக் குறைந்த நடை முறைக்கு சாத்தியமான முறை , ஆனால் சிறந்த முறை
இதை நடை முறைப் படுத்துவதில் அரசியல் பிரச்சனைகள் உள்ளதைவிட பாரிய செலவு ஏற்படும் .
இதற்கு முதல் ஏரிகளை நன்னீர் ஆக்க வேண்டும் , போதவிடில் இதை கருத்தில் கொள்ளலாம் .
இதை நடை முறைப் படுத்துவதில் அரசியல் பிரச்சனைகள் உள்ளதைவிட பாரிய செலவு ஏற்படும் .
இதற்கு முதல் ஏரிகளை நன்னீர் ஆக்க வேண்டும் , போதவிடில் இதை கருத்தில் கொள்ளலாம் .
2. நிலத்தடி நீர் சேகரிப்பை அதிகரித்தல்
1. முதல் கூறியது போல விரயத்தை தடுத்தல்
2. பசுமை நிலங்களை [green belt area ] அறிந்து அதை பிரகடணப் படுத்துதல் - காணியுள்ளவன் செல்வாக்கிருந்தால் எதை வேண்டுமானாலும் கட்டலாம் , எவ்வளவு உயரத்துக்கு கட்டலாம் என்ற நிலைமையை மாற்ற வேண்டும் . ஒவ்வொரு உள்ளூராட்சி சபைகளும் தோட்டங்கள் , வயல்கள் , பற்றைகள் , வெளிகளை மட்டுமல்லாது நீர் ஓடும் தனியார் காணிகளையும் பசுமை நிலங்களாக அறிவித்து அதில் தலை கீழாக நின்றாலும் கட்டடம் கட்ட முடியாத சட்டங்களை உருவாக்க வேண்டும் . கட்டடங்களை எழுந்தமானமாக கட்டுவதால் மழை நீர் நிலத்துடன் சேர்வது குறைவடைவதுடன் , அதிக நீர் கடலை அடையவும் , வெள்ளம் போன்ற ஆபத்து வரவும் வழி வகுக்கும் .
3. புதிதாக காடு வளர்த்தல் - மரம் உள்ள பகுதிகள் மழை நீர் நிலத்துடன் சேர்வதை அதிகரிக்க செய்யும் .
4. குளங்களை புனரமைத்தல் , யாழ்ப்பாணத்தில் 992 குளங்கள் உள்ளன இவற்றை புனரமைத்து , அதிக மழை நீரை தேக்குவதுடன் , அதன் ஆவியாகும் விகிதத்தை குறைக்க நடைமுறைகளை ஆராய்ந்து செயற்படுத்த வேண்டும் , குளங்களுக்கு அடியில் ஆழமான இலகுவாக நீர் நிலத்தடி நீரை அடையக்கூடிய அமைப்பை உருவாக்க வேண்டும் .
5. நிலத்தடி நீர் கடலுடன் சேராமல் நிலத்தடி அணைகளை அமைத்தல்.
6. புதிதாக அமைக்கும் கிணறுகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல்.
7. மழை நீர் கடலுடன் சேரமுன் ஏரி குளம் குட்டைகளை நிரப்ப , சிறந்த வடிகால் அமைப்பை ஏற்படுத்தல்
8. கழிவு நீர் கடலுடன் கலக்காமல் அதை சுத்திகரித்தல். இது பிற தேவைக்கு பயன்படுவதுடன் நிலத்தடி நீரையும் அதிகரிக்க உதவும் .
9. மழை நீரை மக்கள் கொள்கலனில் சேகரிக்க உதவுதல் - புதிதாக நிர்மாணிக்கும் வீடுகளுக்கு மழை நீர் சேகரிப்பு வசதியை கட்டாயமாக்குதல் . அத்துடன் எல்லா வீடுகளிலும் இதை நடைமுறைப் படுத்த ஊக்குவித்தல் .
10. யாழ்ப்பாணத்தில் உள்ள ஏரிகளை நன்னீராக்குதல் - நேரடி பாவனைக்கு உதவுவதுடன் , நிலத்தடி நீரையும் அதிகரிக்கச் செய்யும் .
11. யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று நிலத்தடி நீர் நிலைகளை இணைத்தல் - இது ஒரு பகுதியில் பெய்யும் மழை எல்லா இடமும் பயன் பெற உதவும் . ஆனால் எவ்வளவு தூரம் நடை முறைக்கு சாத்தியம் என்பது விவாதத்துக்குரியது .
3. நீர் மாசடைவதை தடுத்தல்
இது ஒரு முக்கியமான விடயம்
1. கிருமிநாசினிகள் சிலதையும் செயற்கை உரங்களை முற்றாகவும் தடை செய்ய வேண்டும் , இதனால் வரும் விளைச்சலை விட வரும் உளைச்சல் அதிகம் . அவர்கள் இயற்கை உரங்களை பாவிக்க ஊக்குவிக்க வேண்டும் .
1. கிருமிநாசினிகள் சிலதையும் செயற்கை உரங்களை முற்றாகவும் தடை செய்ய வேண்டும் , இதனால் வரும் விளைச்சலை விட வரும் உளைச்சல் அதிகம் . அவர்கள் இயற்கை உரங்களை பாவிக்க ஊக்குவிக்க வேண்டும் .
2. கடல் நீர் கிளத்தடி நீருடன் சேராமல் நிலக்கீழ் அணைகளை [ underground dam ] அமைக்க வேண்டும்
3. கழிவு நீர் நல்ல தண்ணியுடன் கலக்க முன் அதை ஒரு சுத்திகரிப்பு நிலையத்தில் பதப்படுத்தி பிற தேவைகளுக்கு உபயோகிக்க வேண்டும்
4. தொழிற் சாலைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் , கழிவுகளை நீர்நிலையுடன் கலக்க விடுவதை ஒரு இனப்படுகொலை குற்றமாக பார்க்க வேண்டும்.
4. ஏரிகளை உப்பகற்றி , நன்னீர் ஏரியாக்குதல் - யாழ்ப்பாண ஆற்றுத் திட்டம்
யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று ஏரிகளை உப்பகற்றி பராமரிப்பது ஒரு மிக மிக அவசியமான ஒன்று . இதை நாம் செய்யாவிடின் யாழ்ப்பாணம் ஒரு பாலைவனப் பிரதேசம் போன்று ஆகிவிடும் . இதுவே எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தின் வாழ்வாதாரம் .
நன்மைகள்
1. நிலத்தடி நீரை அதிகரிக்க செய்யும்
2. குடி நீர் பிரச்சனைக்கு தீர்வு
3. விவசாயம் கால்நடை வளர்ப்பிற்கு உகந்தது - பொருளாதாரத்தை பல மடங்காக உயர்த்தும்
4. நன் நீர் மீன் உற்பத்தியை வளர்க்க முடியும்
5. வெள்ளம் போன்ற ஆபத்துகளை குறைக்கும்

பிரச்சனைகள்
1. இது ஒரு கருத்தளவிலான திட்டம் - மேலும் ஆராய்ச்சிகள் தேவை
2. இதை நன்னீர் ஆக்குவது - கடல் மீன்பிடியை பாதிக்கும்
3. ஆவியாதல் மூலம் நீர் இழத்தலை தவிர்க்க கட்டமைப்பு தேவை
4. மழை நீர் கடலுடன் சேராமல் ஏரியை வந்தடைய கட்டமைப்பு தேவை
5. கழிவு நீர் சேராமல் கட்டமைப்பு தேவை
6. ஏரி நீர் பல பாகங்களுக்கும் சேர கட்டமைப்பு தேவை
7. யாழ்ப்பாணம் சம தரை என்பதால் அணை கட்டுவதில் சிக்கல் - எனவே அதிக நீரை கொள்ள ஏரியை ஆழமாக்க வேண்டும்
8. ஏரி நீர் நிலத்தடி நீரை அடைய கட்டமைப்பு தேவை
9. ஏரி நீர் கடலுடன் சேராமல், கடல் நீர் ஏரி உடன் சேராமல் நிலத்தின் மேலும் நிலத்தின் கீழும் கட்டமைப்பு தேவை
10. உப்பாக உள்ள ஏரியை உப்பகற்ற வழிமுறை தேவை

ஆக பல பிரச்சனைகள் இந்த திட்டத்துடன் கலந்துள்ளது , இதை எவ்வாறு செயலுறு பெற வைப்பது
1. அரசாங்க சார்பற்ற தன்னார்வு நிறுவனம் ஓன்றை, துறை சார்ந்த அறிவு ஜீவிகள் தலைமையில் , மக்கள் , சமூக ஆர்வலர்களை இணைத்து உருவாக்குதல்
2. செயல் திட்டம் ஒன்றை வரைதல்
3. பணம் சேர்த்தல்
4. துறை சார் பெரியவர்களின் உதவி பெறுதல்
5. ஆராய்ச்சி செய்தல்
6. பிரச்சார பொறிமுறை அமைத்தல்
7. நடை முறைப் படுத்துதல்

இதில் பணம் சேர்த்தல் என்பது முக்கியமான விடயம் , இதை எவ்வாறு செயற்படுத்துவது
1. பணம் சேர்க்க தனிக் குழு அமைத்தல்
2. புலம் பெயர் தேசங்களில் தனிக்கிளை அமைத்தல்
3. வெளிப்படையான காசு சேகரித்தல், செலவழித்தல் பொறிமுறையை அமைத்தல்
3. ஒவ்வொரு புலம் பெயரிடமும் ஆகக் குறைந்தது ஐந்து டொலர் ஆவது சேகரித்தல்
4. செல்வந்தர்களிடம் கொடையை பெறுதல்
5. வெளிநாட்டு அரசுகளிடம் உதவி கோருதல்
6. தன்னார்வு தொண்டு நிறுவனங்களிடம் உதவி கோருதல்
7. கலை நிகழ்ச்சிகள் மூலம் காசு சேகரித்தல்
8. இலங்கை அரசாங்கத்திடம் உதவி கோருதல்

சில தரவுகள்
யாழ்ப்பாணத்தில் உள்ள குடும்பங்கள் - 186,500
யாழ்ப்பாண மக்கள் தொகை - 610,000
யாழ்ப்பாண பரப்பளவு 1025.3 சதுர கிலோமீட்டர்
நீர் ஏரியின் பரப்பளவு - 41.7 சதுர கிலோமீட்டர்
நிலத்தின் பரப்பளவு 983 சதுர கிலோமீட்டர்

யாழ்ப்பாண சனத்தொகை 1989 இல் 855,000
ஒரு தனி நபருக்கு நாளுக்கு தேவையான நீர் அளவு - 50 -150 லிட்டர்
யாழ்ப்பாண குடி நீர் தேவை வருடத்துக்கு - 19 MCM
விவசாய நீர் தேவை வருடத்துக்கு - 228 MCM
ஒரு தனி நபருக்கு நாளுக்கு தேவையான நீர் அளவு - 50 -150 லிட்டர்
யாழ்ப்பாண குடி நீர் தேவை வருடத்துக்கு - 19 MCM
விவசாய நீர் தேவை வருடத்துக்கு - 228 MCM
சராசரி ஆண்டு மழை நீர் - 1460MCM
நிலத்தின் கீழ் செல்லும் நீர் ஆண்டுக்கு - 770MCM
அதில் ஆவியாக போவது ஆண்டுக்கு - 385MCM
மழை வெள்ளம் - 690 MCM
அதில் ஆவியாக போவது ஆண்டுக்கு - 345MCM
கடலுடன் சேரும் வெள்ளம் ஆண்டுக்கு - 225MCM
மொத்த ஆவியாதல் ஆண்டுக்கு - 895MCM[ 61%]
வடமராட்சி ஏரியில் சேர்வது - 72MCM
ஆனையிறவில் சேர்வது - 8MCM
உப்பாற்றில் சேர்வது 39MCM
முன்பு ஏரிகளில் 250 000 acre foot நீரை சேமிக்க முடிந்தது

ஆண்டு மழை வீழ்ச்சி - 635 mm ஆகக் குறைந்தது - 1909mm ஆகக் கூடியது
இது ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் ஆனால் தொடர்ச்சியாக குறைவடைவதாக தரவுகள் இல்லை
MCM - மில்லியன் கன மீட்டர் =1000000000 லிட்டர்
1 acre foot =1233482 லிட்டர்
இது ஆண்டுக்கு ஆண்டு வேறுபடும் ஆனால் தொடர்ச்சியாக குறைவடைவதாக தரவுகள் இல்லை
MCM - மில்லியன் கன மீட்டர் =1000000000 லிட்டர்
1 acre foot =1233482 லிட்டர்
No comments:
Post a Comment