Sunday, 17 February 2019

தமிழர் நலன்களுக்கு ஆதரவான சிறிமாவோ அரசாங்கத்தை தமிழர் நலன்களுக்கு எதிரான சிறிமாவோ அரசாங்கமாக திசை திருப்பிய கிறிஸ்தவ தமிழரசு கட்சி பாகம்-1


யாழ் மாவட்ட சைவத்தமிழ் மாணவர்கள் கல்வி அறிவு பெறக்கூடது என்ற கபட நோக்கம் கொண்ட கிறிஸ்தவ தமிழரசு கட்சியின் எதிா்பிற்கு மத்தியில்1972ல் இலங்கை சுதந்திரக் கட்சி வெற்றிபெற்று சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமரான பின்னர் 1974 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமொன்றை நிறுவினார்.
வட்டுக்கோட்டையில் உள்ள யாழ்ப்பாணக் கல்லூரி வளவிலமைந்துள்ள பட்டதாரி மாணவப் பிரிவையும் 1921 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் சேர். பொன்னம்பலம் இராமநாதனால் திருநெல்வேலியில் அமைக்கப்பட்டிருந்த பரமேசுவராக் கல்லூரியையும் இணைப்பதன் மூலம் 1974 ஆகத்து 1 ஆம் நாள் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் நிறுவப்பட்டது.
1974 சூலை 19 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான எல். எச். சுமணதாச வித்தியாலங்காரப் பல்கலைக்கழகத்தின் இந்துக் கற்கை, தமிழ் ஆகிய துறைகளின் தலைவரான கலாநிதி க. கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டதை அறிவித்தார்.

இவ்வாறு 1974 சூலை 25 வியாழக்கிழமை வெளியிடப்பட்ட 121/5 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியாகிய பிரகடனத்தின் மூலம் 1974 ஆகத்து முதலாம் நாள் நிறுவப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகம் சட்டபீடம், உடற்கல்விப்பீடம் என்பவற்றை நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஆரம்பத்தில் விஞ்ஞான பீடம், மனிதப் பண்பியற் பீடம் என்பவற்றுடன் மாத்திரம் ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாண வளாகத்தின் முதல் போதனைசார் ஊழியர்களாக 1974 செப்டெம்பர் 1 ஆம் திகதியன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் பணியாற்றிய சில ஆசிரியர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்நிலைமைகளைத் தொடர்ந்து இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியான சிறிமாவோ பண்டாரநாயக்கா அவர்களால் 1974 அக்டோபர் 6 ஆம் நாள் பிற்பகல் 2.25 மணியளவில் யாழ்ப்பாண வளாகம் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அன்றைய தினம் யாழ்ப்பாண வளாகத்தின் முதல் 14 மாணவர்களுக்கான மாணவர் பதிவுப் புத்தகம் பிரதமரால் வழங்கப்பட்டது.

அக்காலத்தில் இலங்கையிலிருந்த பல்கலைக்கழகங்கள் அனைத்தும் இலங்கைப் பல்கலைக் கழகம் என்ற ஒரே பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு வளாகங்களாகவே செயற்பட்டு வந்தன. எனவே யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட பல்கலைக் கழகமும், “இலங்கைப் பல்கலைக் கழகம், யாழ்ப்பாண வளாகம்” என்றே அழைக்கப்பட்டது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக்கழகங்கள் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதன் விளைவாக உயர்கல்வி நிர்வாக அமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கை பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் 1979 சனவரி 1 ஆம் நாள் தன்னாதிக்கமுள்ள பல்கலைக்கழகமாகியது.

தமிழறிஞர் பேராசிரியர் சு. வித்தியானந்தன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டார்.


மேலும் யாழ் பல்கழைக்கழக உருவாக்கம் பற்றிய முழு விபரங்கள் திரு.கே.ரி.இராசசிங்கம் அவர்கள் எழுதிய தேசியத்தின் சங்ககமம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சைவதமிழர்களின் கல்வியை வளா்த்து விட்ட சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக போா் செய்த கிறிஸ்தவ தமிழரசு கட்சி சைவதமிழர்களின் பொருளாதாரத்தை வளர்த்து விட்ட கட்சிக்கு எதிராக போா் செய்த கிறிஸ்தவ தமிழரசு கட்சி ,சைவதமிழர்களின் கல்வி , பொருளாதாரத்தை அழிக்க நின்ற ஐக்கிய தேசிய கட்சிக்கு என்றும் ஆதரவாக செயல் படும் கிறிஸ்தவ தமிழரசு கட்சி.

No comments:

Post a Comment