Saturday, 2 March 2019

அன்பேசிவம் பிறந்தநாள் என்பது ஆங்கில திகதியா?

பிறந்தநாள் என்பது தமிழ் திகதியா?
பிறந்த நாள் எப்படி கொண்டாடப்பட வேண்டும்.?
பிறந்த நாள் ஏன் கொண்டாடப்பட வேண்டும்.?
இந்த புவியில் மனிதப் பிறவியாய் பிறந்திருக்கின்றோம். நாம் எவ்வளவோ பாவ புண்ணியங்கள் செய்திருந்தாலும் அவற்றை மாற்றக்கூடிய வல்லமையோடு இந்த பிறவியில் பிறந்திருக்கிறோம் அப்படிப் பிறந்த நாளை நாம் கண்டிப்பாக கொண்டாடியாகவேண்டும். நம்முடைய பிறந்தநாளில் நமக்கு கிடைக்கும் வாழ்த்துக்களும் ஆசிகள் நிறைந்து கிடைக்கும் என்பது உறுதி.
அந்த தமிழ் மாதத்தின் நட்சத்திரம் முக்கியமானது.
திருமண பத்திரிகைகளில் கூட, ‘ “இன்ன” நட்சத்திரத்துடன் கூடிய சுபயோக தினத்தில்’ என்றுதான் பிரசுரம் செய்யப்படுகின்றது என்பதையும் நாம் கவனித்திருப்போம்.
பிறப்பு முதல் இறப்பு வரை நட்சத்திரம் முதன்மை கருப்பொருளாக விளங்குவதை நாம் திதி, திவசம் போன்ற பல நிகழ்வுகள் மூலம் உணரமுடியும். அதற்கு இங்கே பல உதாரணங்கள் உண்டு.
அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கும் வருடாவருடம் அவர்களது பிறந்த தமிழ்மாதத்தில் வரும் நட்சத்திரத்தினத்தன்று தான் கோவில்களில் சிறப்பு வழிபாட்டு பூஜை செய்வார்கள்.
தமிழர்களின் பிறந்தநாள்விழா அனைத்துமே தமிழ்மாத நட்சத்திரத்தை சார்ந்தே அமைகிறதென்பதை இதன் மூலமாக தெளிவுறலாம்.
ஆண்டு தோறும் உங்களது ஜென்ம நட்சத்திரம் நீங்கள் பிறந்த தமிழ் மாதத்தில் எந்த தேதியில் வருகிறதோ அன்றைக்கு உங்களது பிறந்தநாள் விழாவையும் வைத்து கொள்வதுதான் நம் பாரம்பரியதை காக்கும் அடையாளமாக அமையும்.
பிறந்தநாளில் கேக் வெட்டி கொண்டாடுவது சரியா?
தவறு.
பிறந்தநாளில் மெழுகுவர்த்தி அணைத்து கொண்டாடுவது சரியா?
தவறு.
மெழுகுவர்த்தி(மெழுகு என்பது விலங்கு கொழுப்பில் எடுக்கப்படுவது, எதிர்மறை அதிர்வு உடையது, ஆக, மெழுகுதீபம் தவிர்ப்போம்)ஏற்றி, வாயால் ஊதி தீபத்தை அவமதிக்கிறோம்...
இந்நாளில் பெரும்பாலான அனைவரும் இந்த முறையைக் கடைப்பிடிக்கிறார்கள். இது தவறான முறையாகும். பிறந்த நாள் என்பது நாம் இந்த புவியில் அவதரித்த நாள். அந்நாளில் தான் இந்த உலகத்தின் மின்காந்த அலைகளை நாம் முழுவதுமாக தன்னிச்சையாக சுவாசிக்த் தொடங்குகிறோம். எல்லாவற்றிற்கும் துவக்கமாகத் தான் இந்த நாள் அமையவேண்டுமே தவிர, எதையும் அணைக்கவோ வெட்டவோ கூடாது.
பிறந்தநாள் என்பது
ஆங்கில திகதியா? தமிழ் திகதியா?.
இரண்டும் இல்லை
பிறந்த தமிழ்மாதத்தில் வரும் ஜென்ம நட்சத்திர நாள் தான் பிறந்த நாள்.
நாம் பிறந்த தமிழ்மாதத்தில் நாம் பிறந்த நட்சத்திரம் என்று வருகிறதோ அன்று தான் நம்முடைய பிறந்த நாள். ஒரே மாதத்தில் இரண்டு முறை வருமானால் சுக்ல பட்சம் அமர பட்சம் அதாவது வளர்பிறை தேய்பிறை பார்த்து நாம் பிறந்த திதியை அனுசரித்து பிறந்த நாள் கொண்டாட வேண்டும்.
பிறந்தநாளில் செய்யவேண்டியது ஆண்மீக கடமைகள் அம்மை பெற்றோர்களிடம் ஆசி பெற்று அப்பனாக எழுந்தருளி இருக்கின்ற சிவஆலயத்தில் அம்மை அப்பனிடம் ஆசி பெறல் வேண்டும் மற்றும் நல்லோரிடம் ஆசி பெறுவதுடன் மானிடராகப் பிறந்தாலும் மானிடராய் பிறப்பெடுத்து குறைகள் நீங்கிப் பிறந்து ஞானமும் கல்வியும் அருளிய இறைவனுக்கு நன்றி கூறுவதுடன் நின்று விடாமல் மதாந்த நட்சத்திர வழிபாடு சிவஆலயத்தில்தான் செய்தல் சைவத்தமிழனின் தொண்மை வாய்ந்த வழிபாட்டு முறை
அழிந்து போன எமது வழிபாடுகளை மீள் புணரமைப்பு செய்வோம் எழுந்து வாரீா் சிவத்துடன் சிவத்தைப்பெற்று சைவப்பெரும் குடிமக்களே எழுவோம்
வாழ்த்துவது எப்படி ?
எல்லாவிதமான செல்வங்களும் ,
எல்லாவிதமான கல்வியையும்,
என்றும் சோர்ந்து போகாத மனம்,
தெய்வீகமான உருவம் பெற்று,
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத நண்பர்களுடன் இனைந்து,இன்னும் என்ன என்ன நன்மைகள் எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெற்று, சுற்றம் , சூழ எல்லோரிடமும் நட்புடன்,அன்புடன் இறைஅருளால் நல்ல உடல் ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் நிரைந்த மகிழ்ச்சியையும் பெற்று வாழ மணதார மனமார வாழ்த்துகிறேன்
கூறி வாழ்த்துவது சைவதமிழனின் பண்பு .
அன்பேசிவம்

No comments:

Post a Comment